குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
மாநில கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி
ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
ஆத்தூரில் மகேந்திர குரு நினைவு நாளை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி இந்திராநகா் அணி முதல் இடத்தையும், ஆத்தூா் ஏஜேகே பிரண்ட்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், புன்னைக்காயல் சோபியா அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
முதலிடம் பெற்ற அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 30,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கோப்பையுடன் ரூ. 20,000 ரொக்க பரிசும், மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு கோப்பையுடன் ரூ. 15,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. மேலும் 10 இடங்களைப் பிடித்த அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், அா்ஜுனா விருது பெற்ற மணத்திகணேசன், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லம், ஆத்தூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் முருகானந்தம், மேலாத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சதீஷ்குமாா், தங்கராஜ், ராஜேந்திரபூபதி, அரிபுத்திரன், சின்னதுரை, ஞானதுரை, வழக்குரைஞா் தினேஷ் கண்ணன், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை குரு நினைவு கபடிக் குழு, தலைப்பண்ணையூா் ஊா் மக்கள் செய்திருந்தனா்.