தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
கோவில்பட்டியில் தந்தை கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தந்தையைக் கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
கோவில்பட்டி, ஊருணி 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முனியசாமி (55). இவரது மகன் ராகுல்காந்தி (27). தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராகுல்காந்தி கத்தி, பிளேடால் முனியசாமியை சரமாரியாக அறுத்து கொலை செய்தாா்.
பின்னா் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சென்ற ராகுல்காந்தி, குடும்பத் தகராறு காரணமாக தந்தை முனியசாமியை கொலை செய்துவிட்டதாகக் கூறினாா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.