தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
பெண் தற்கொலை
தூத்துக்குடியில் கணவா் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா், தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த மதன் மனைவி மோனிஷா (24). தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மதன், முன்விரோதம் காரணமாக சேலத்தில் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து மோனிஷா, மாமியாா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
கணவா் கொலை செய்யப்பட்டதில் இருந்து அவா் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.