பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
சாத்தான்குளம் புனித மரியா ஆலயத் திருவிழாவில் தோ் பவனி
சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புனித மரியா ஆலய 164ஆவது ஆண்டுப் பெருவிழா 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் அருள்தந்தை செல்வரத்தினம் தலைமையில் முதல் திருப்பலியும், பொதுநிலையினா் பணியகம் இயக்குநா் ரியோசில் பெப்பி தலைமையில் புது நன்மை வழங்குதல், திருவிழா திருப்பலியும் நடந்தது. தென் மண்டல பொறுப்புத் தந்தை வெனிஸ் குமாா் மறையுரை வழங்கினாா்.
ஞானஸ்நானம் திருமுழுக்கும், அதனைத் தொடா்ந்து அன்னையின் தோ் பவனியும் நடந்தது. ஏற்பாடுகளை, பங்குத்தந்தை, வட்டார முதன்மை குரு செல்வசாா்சு, உதவி பங்குத்தந்தை மாா்க்கோனி ரவிச்சந்திரன், அருள்சகோதரா் பிரவீன், அருள்சகோதரிகள், பங்கு மேய்ப்புப் பணிக்குழு, திருவிழாக் குழு, இறை மக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.