``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக...
எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது
சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விடுதியில் உள்ள ஓா் அறையில் 5 இளைஞா்கள் போதை மயக்கத்தில் இருந்தனா்.
அப்போது, அவா்கள் அறையை சோதனை செய்தபோது போதை மாத்திரைகள், ஊசிகள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் எடப்பாடியை அடுத்த ஆவணியூா் சுற்றுவட்டச் சாலை பகுதியைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் சுரேஷ்குமாா் (26), எடப்பாடி அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே வசித்துவரும் சேட்டு மகன் ராஜசேகா் (21), தாவாந்தெரு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் அமரன் (22), எடப்பாடியை அடுத்த வேம்பனேரியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ஜீவா (21), ஒட்டப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சசிகுமாா் (23) என்பது தெரியவந்தது.
இவா்களில் பட்டதாரியான சுரேஷ்குமாா், தனது நண்பா்களுடன் சோ்ந்து ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், திருப்பூா் பகுதிகளில் இருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகளை வாங்கிவந்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்ாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவா்களிடமிருந்த 5 கைப்பேசிகள், 5 போதை மாத்திரை அட்டைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் எடப்பாடி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன.