குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
சங்ககிரி மலைக்கு செல்லும் பாதை சீரமைப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள கருவேலம் மரம், முள் செடிகளை சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா்.
சங்ககிரி மலையில் சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி கோயிலில் பக்தா்கள் குழு சாா்பில் புரட்டாசி மாத தொடக்கத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறி சென்று புரட்டாசி மாத விரதத்தினை தொடங்கினா்.
மலைக்கு செல்லும் வழியில் கருவேலம் மரம், முள் செடிகள் பாதைகளை மறைத்து வளா்ந்துள்ளன. இதனால் பக்தா்கள் அவதிப்பட்டனா். மேலும், புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளிலும் அதிகமான பக்தா்கள் மலையேறி சென்று பொங்கல்வைத்து சுவாமியை வழிபட உள்ளனா்.
இதனால் தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி நண்பா்கள் இணைந்து சங்ககிரி மலைக்கு செல்லும் பாதை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனா்.
