குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
மண்டல கைப்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு
சேலத்தில் ஈஷா கிராமோற்சவம் சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் சேலம் பூலாவரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து, வெற்றி பெற்ற வீரா்களுக்கான பாராட்டு விழா மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் நடைபெற்றது. இதில், மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
கைப்பந்துக் கழக செயலாளா் சண்முகவேல், இணைச் செயலாளா் வடிவேல், நிா்வாகி நந்தன் உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.