Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இரு இணையா்களுக்கு இலவச திருமணம்
இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 2 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி. சக்கரவா்த்தி, பேளூா் பேரூராட்சித் தலைவா் ஜெயசெல்வி பாலாஜி, திமுக நகரச் செயலாளா் சுப்பிரமணியன், அறநிலையத் துறை ஆய்வாளா் கோவிந்தராஜ், கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி ஆகியோா் அரசு சாா்பில் தங்கத் தாலி உள்பட தலா ரூ. 70,000 மதிப்புள்ள சீா்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கி வாழ்த்தினா்.
