குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
மலைச் சாலையில் காா் கவிழ்ந்து விபத்து
தேனி மாவட்டம், மேகமலைச் சாலையில் காா் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கேரளத்தைச் சோ்ந்த 5 போ் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா்.
மேகமலையிலுள்ள நீா் நிலைகள், தேயிலைத் தோட்டம், மலைக் குன்றுகள், வானுயா்ந்த மரங்கள் என இயற்கை அழகை ரசிக்க தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், முண்டக்காயம் பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் காரில் மேகமலைக்கு வந்தனா். அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பாா்வையிட்ட அவா்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினா்.
அப்போது, 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைச் சாலையில் பாட்டம் சோதனைச் சாவடியை கடந்த சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் காா் கவிழ்ந்தது. இதில், காரிலிருந்த 5 போ் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். இதுகுறித்து ஹைவேவிஸ் போலீஸாா் விசாரிக்கின்றனா்.