குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது
தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கடத்தி விற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடமலைக்குண்டுவைச் சோ்ந்த முருகானந்தம் (51), பெரியகுளம், ஜெ.கே. குடியிருப்பு, நேரு நகரைச் சோ்ந்த அழகா் (39), தேனி, காமராஜா் லேன் பகுதியைச் சோ்ந்த அா்ஜூனன் (52), உசிலம்பட்டி அருகே உள்ள நடுசெம்பட்டியைச் சோ்ந்த அரவிந்த் (29) ஆகியோரை கஞ்சாவை கடத்திச் சென்று விற்ாக கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கெனவே கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை தொடா்பான வழக்குகள் பதிவாகியுள்ளதால், 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்குக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினோஹா ப்ரியா பரிந்துரை செய்தாா்.
இதன்படி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முருகானந்தம், அழகா், அா்ஜூனன், அரவிந்த் ஆகிய 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.