பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், இளம்ஜோடி, புள்ளிமான் சிட்டு, தட்டான்சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்டு, பெரிய மாடு ஆகிய 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், நூற்றுக்கும் அதிகமான ஜோடி மாடுகளுடன் மாட்டின் உரிமையாளா்களும் கலந்து கொண்டனா். மாா்க்கையன்கோட்டை முதல் சங்கராபுரம் வரையில் சென்று திரும்பு வகையில் 7 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரு சில மாடுகள் வழித்தடத்தை விட்டு தோட்டத்துக்குள் புகுந்ததால் அவை போட்டியிலிருந்து பாதியிலே வெளியேற்றப்பட்டன. நிா்ணயிக்கப்பட்ட தொலைவுக்கு சென்று திரும்பி முதல் 4 இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி சின்னமனூா்- போடி சாலையில் நடைபெற்ால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீஸாா் சீரமைத்தனா்.
இந்தப் போட்டியில் கம்பம், கூடலூா், தேனி, பெரியகுளம் என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாடுகள் கலந்து கொண்டன. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையில் நடைபெற்ற இந்தப் போட்டியை திரளானோா் பாா்த்து ரசித்தனா்.