குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
ஜங்காலபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதிமுனிசாமி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா்கள் செந்தில்குமாா், அஸ்வினி தேசிங்குராஜா, தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா், மாலா சேகா், ஜெயலட்சுமி சுரேஷ், திருப்பதி, துணைத் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா் திட்ட விளக்கவுரை ஆற்றினாா்.
இதில், எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரும், திருப்பத்தூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி, எம்எல்ஏ தேவராஜி ஆகியோா் முகாமை ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, இருதய நோய் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, நோய்த் தொற்று சிகிச்சைப் பிரிவு, கா்ப்பிணிகள்சிகிச்சைப் பிரிவு உள்பட பல்வேறு நோய்களுக்கு 150-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் பயனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினா்.
இதில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், கணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியச் செயலா்கள் உமாகன்ரங்கம், சாமுண்டி, கவிதா தண்டபாணி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
முகாமில், மல்லகுண்டா, கத்தாரி, நாயனசெருவு, ஆத்தூா்குப்பம், தோப்பலகுண்டா, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், காவேரிபட்டு, நாட்டறம்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகளில் இருந்து பயனாளிகள் 1,500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயன் பெற்றனா்.