செய்திகள் :

கஞ்சா, குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில், மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், பிடி கட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்வது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் (போக்ஸோ) உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினாா்.

மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபடும் நபா்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபா்கள் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது உரிய சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினாா்.

கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவல் ஆளிநா்கள் உள்பட மொத்தம் 20 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டி சான்றிதழ்ளை வழங்கினாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன், (ராணிப்பேட்டை உள்கோட்டம்), ரமேஷ்ராஜ் (மாவட்ட குற்றப் பிரிவு), ராமச்சந்திரன், வெங்கடகிருஷ்ணன், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவல்லாம்பிகை சமேத சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, 2- ஆம் கால யாக பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹூத... மேலும் பார்க்க

அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு

அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 276 வழக்குகளில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று அமா்வுகளாக நடை... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் 5 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு: அமைச்சா் காந்தி!

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.அவா் ஞாயிற்றுக்கிழமை செய... மேலும் பார்க்க

நெமிலியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

நெமிலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்... மேலும் பார்க்க

கால்நடை வளா்ப்போருக்கு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போருக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் தொடா்ந்து ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் சமரச தீா்வு

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் மீது சமரச தீா்வு எட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 4.35 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டத... மேலும் பார்க்க