செய்திகள் :

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது!

post image

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் காவல் துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டது.

நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவரை ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி கடந்த வியாழக்கிழமை (ஜன.09) அன்று அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். மேலும், அவராகவே அன்று காலை 11 மணியளவில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திற்கு நடந்து சென்று ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும், அவரது உடலை பொதுமக்கள் யாரும் பார்க்கக்கூடாது எனவும் அவர் அறிவுருத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் கோபன் சுவாமியின் உடல் தோண்டியெத்து உடற்கூராய்வு செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த பணியை அதிகாரிகள் கடந்த ஜன.13 அன்று துவங்கியப்போது அந்நபரது குடும்பத்தினர் மற்றும் இந்து மத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால், அந்த இடமே பரபரப்பானதினால் கோபன் சுவாமியின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், கோபன் சுவாமியின் மரணத்திலும் அவரது இறுதி சடங்கு நடைபெற்ற முறையிலும் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க:ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது! அதானி குழுமத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அமைப்பு!

இதனைத் தொடர்ந்து, அன்று முதல் அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் குவிக்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜன.15) மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போது, அவரது உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவரை சுற்றியிலும் விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரது உடல் திருவனந்தப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஓ.வி. ஆல்பிரட் கூறியதாவது, கோபன் சுவாமியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரது உடல் கூராய்வு சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனை முடிந்தபின்னர் மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.

முன்னதாக, அவரது உடலை தோண்டுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என கோபன் சுவாமியின் குடும்பத்தினர் கேரள மாநில உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர், ஆனால் மர்ம மரணங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கையெடுப்பது அவர்களது அதிகார உரிமை எனக்கூறி தடைசெய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ... மேலும் பார்க்க

உணவுத் தொழிற்சாலையில் வெடி விபத்து! 13 பேர் படுகாயம்..3 பேர் கவலைக்கிடம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஆக்ராவின் கரிபார்வத் மாவட்டத்தில் இயங்கி வந்த மெட்லே பிரட் பாக்ட்ரி எனும் உணவு உற்பத்... மேலும் பார்க்க

இந்தியா வழியாக மியான்மரிலிருந்து வங்கதேசத்திற்கு ஆயுதம் கடத்திய 5 பேர் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக ஆயுதம் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.வடகிழக்கு மாநிலமான மிசோரமின் மாமிட் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படைய... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் பலி!

காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ... மேலும் பார்க்க

எல்ஐகே படத்தில் சீமான்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இயக்குநரும் நடிகருமான சீமான் இணைந்துள்ளார்.இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ்பிரதீப் ரங்கநாதனைவைத்து புதிய படத்தைஇயக்கி வருகிறார்.இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் க... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுக்க முயன்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுக்க முயன்ற ஜாக்லின், குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வராததால் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச... மேலும் பார்க்க