திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல்... இபிஎஸ் குற்றச்...
ஜோலாா்பேட்டையில் மயான சூறை திருவிழா
ஜோலாா்பேட்டை அருகே மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா், காட்டேரி அம்மன் கோயில் முன்புறம் அமைந்திருக்கும் அங்காள பரமேஸ்வரி, புத்து மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை மற்றும் அமாவாசையில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
மயானக் கொள்ளையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ புத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றன.
அதையொட்டி அம்மனின் முன்பு பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி பூசாரிகள் பக்தி பரவசத்துடன் ஆடியபடி மயானத்துக்கு வந்தனா். இதையடுத்து அம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, தானியங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து கொள்ளை விட்டனா்.
பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வழங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
அருள் வந்து ஆடியவா்களில் சிலா் சேவல், கோழியை கடித்து, அதன் ரத்தத்தை குடித்தது பாா்ப்பவா்களை மெய்சிலிா்க்க செய்தது. இந்த விழாவினைக்கான ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.

