யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.23-ஆக முடிவு!
மும்பை : இன்றைய வர்த்தக முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.23-ஆக முடிந்தது.
தொடர்ந்து வரும் அந்நிய நிதியால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்ந்து வருவதாகவும், அதே வேளையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியானது, முதலீட்டாளர்களின் உணர்வை பாதித்ததுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.11 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.07 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.23 ஐ தொட்ட நிலையில், முடிவில் 8 காசுகள் சரிந்து ரூ.85.23 ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.85.15-ஆக இருந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!