KPY Bala: ``எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!" - KPY பாலா காட்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!
மும்பை: அமெரிக்க-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்கு பிறகு ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி, நிலையான ஏற்றத்தை உறுதிப்படுத்தியதாக அந்நிய செலவாணி வர்த்தகர்தள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.22 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.88.06 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.34 ஐ தொட்ட நிலையில், முடிவில் 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக முடிவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 35 காசுகள் குறைந்து ரூ.88.20ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: மூன்று நாள் உயர்வுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!