செய்திகள் :

எரிசக்தி மையங்களில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம்

post image

இந்திய எரிசக்தி மையங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து பிரிட்டனைச் சோ்ந்த காா்பன் பிரீஃப் அமைப்புக்காக எரிசக்தி மற்றும் தூய காற்றுக்கான ஆய்வு மையம் (க்ரியா) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவின் மின்சார உற்பத்தி ஆலைகள் வெளியிட்ட கரியமில வாயுவின் அளவு, முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதங்களைவிட 1 சதவீதம் குறைவாக இருந்தது. மேலும், கடந்த 12 மாதங்களில் இது 0.2 சதவீதம் குறைந்துள்ளது. 50 ஆண்டுகளில் அது குறைவது இது வெறும் இரண்டாவது முைான் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தியிலிருந்து வெளியாகும் கரியமில வாயு அதிகரிப்பு, 2001-ஆம் ஆண்டின் கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய மிகக் குறைந்த விகிதத்தில் உள்ளது.

2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் துய எரிசக்தி உற்பத்தித் திறன் 25.1 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 69 சதவீதம் அதிகம் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் பயன்பாடு, தொழில்துறை உற்பத்தி மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றின் மாதாந்திர தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அதிகாரபூா்வ ஆதாரங்களிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

டிவிஎஸ் அப்பாச்சியின் 20-ஆம் ஆண்டு விழா எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அப்பாச்சி பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, அப்பாச்சி பை... மேலும் பார்க்க

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பங்குச் சந்தை 4-ம் நாளாக இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

புதுதில்லி: அமெரிக்காவின் உயர் வரிகள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் கிட்டத்தட்ட 8 சதவிகிதத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்... மேலும் பார்க்க

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா, சரக்கு மற்றும் சேவை வரி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா உள்... மேலும் பார்க்க