கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!
டிஜிட்டல் முறையில் பெண் மருத்துவர் கைது - ரூ.7 கோடியை பறித்த ஆன்லைன் மோசடி கும்பல்
சமீப காலமாக ஆன்லைன் மோசடி கும்பல், பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூட சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். மத்திய விசாரணை ஏஜென்சிகளும் தாங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்வது கிடையாது என்று விளக்கம் கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் சைபர் கிரைமில் ஈடுபடுபவர்களிடம் பொதுமக்கள் சிக்கிக்கொள்கின்றனர்.
மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் 54 வயது பெண்ணிற்கு ஜூலை 24-ம் தேதி ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், `உங்களது போன் நம்பர் சந்தேகத்திற்குறிய காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உங்கள் சிம்கார்டு ரத்து செய்யப்படும்’ என்று தெரிவித்தார். மற்றொருவர் போன் செய்து தான் கொலாபா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜய் கண்ணா என்றும், உங்களது சிம் கார்டு பணமோசடி புகாருக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொலாபா போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் கொலாபா போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டாம் என்று கூறினார். அதோடு மற்றொரு நபர் வீடியோ காலில் வந்து தன்னை ராகுல் குப்தா என்றும் சி.பி.ஐ. அதிகாரி என்றும் அறிமுகம் செய்து கொண்டார். அந்த நபர் பெண் டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்வதற்கான போலி உத்தரவை பிறப்பித்தார். அதோடு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனில் தேவைப்பட்டால் வீட்டிற்கு ஆள் அனுப்பி கைது செய்வோம் என்று சி.பி.ஐ அதிகாரி என்று கூறி மிரட்டினார்.
ராகுல் குப்தா மற்றொரு நபரை வீடியோ காலில் வர வைத்து அவரை நீதிபதி தனஞ்சே என்று அறிமுகம் செய்தார். தனஞ்சேயிடம் பெண் டாக்டர் பெயரில் சிம் கார்டு பெறப்பட்டு இருப்பதாக போலி சி.பி.ஐ அதிகாரி ராகுல் தெரிவித்தார். ராகுல் குப்தாவின் உதவியாளர் நிஷா வீடியோ காலில் வந்து பெண் டாக்டரின் வங்கிக்கணக்கு, அவரது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது போன்ற அனைத்து விபரங்களையும் பெண் டாக்டரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதன் பிறகு பெண் டாக்டரை கைது செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டி 6.93 கோடியை அபகரித்துக்கொண்டனர். 13 வங்கிக்கணக்கிற்கு இப்பணத்தை பெண் டாக்டர் அனுப்பி வைத்தார். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டிருந்ததால்தான் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தார். அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரதமரே சொன்னது போல், விசாரணை அமைப்புகள் கூட டிஜிட்டல் அரெஸ்ட் என்று எந்த வழக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. அதனால், இது போன்ற அழைப்புகளுக்கு மக்கள் அச்சப்படாமல் செயல்பட வேண்டும் என்பதே போலீஸார் சொல்லும் வழி.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs