Game Changer: அரசியல் அதிரடி பன்ச் - கேம் சேஞ்சரில் இந்த செய்தி இருக்கிறதா?
டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் 2ஆவது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்.
’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின்.
தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
டிராகன் திரைப்படத்தின் மூலம் இளம் நாயகி ‘கயாது லோஹார்’ தமிழில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையில் உருவாகியுள்ள கனவு பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்தப் புரோமோவில் பிரதீப் ரங்கநாதன், “வெளிநாடுகளில் எல்லாம் படம் பிடித்துள்ளோம். அதனால் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்” என்பார். அதற்கு இயக்குநர் , “ நம்முடைய படம் முதல் பிரேமில் இருந்து கடைசி வரை கதற கதற கதற வைக்கும்” என்பார்.
நாளைக்கு நீங்கள்தான் மீம் டெம்ப்ளேட் ஆகுவீர்களென இயக்குநரை பிரதீப் கிண்டல் செய்வார். இந்த புரோமோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.