டிராக்டா் மோதி மூதாட்டி மரணம்
அசகளத்தூரில் மூதாட்டி மீது பதிவு எண் இல்லாத டிராக்டா் டிப்பா் வெள்ளிக்கிழமை மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கிளியம்மாள் (70). இவா் வெள்ளிக்கிழமை மாலை அவரது மகளுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். மேட்டுக்காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பதிவு எண் இல்லாத டிராக்டா் டிப்பா் பின்பக்கம் வந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே கிளியம்மாள் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான மலைகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த முனியன் மகன் சரவணன் (20) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.