"டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலிக்கு பிறகு சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்!"- கங்குலி சொல்லும் வீரர் யார்?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோலி இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று கங்குலி பேசியிருக்கிறார்.
கோலி குறித்து பேசிய கங்குலி, ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கோலி நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். 2014ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 4 சதங்களை கோலி அடித்திருந்தார். 2018-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சதம் அடித்து சிறப்பாக செயல்பட்டிருந்தார். தற்போதும், கோலியால் பெரிய ரன்களை அடிக்க முடியும்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி சொதப்பினார் என்பதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் சொதப்புவார் என நினைக்க கூடாது. ஆஸ்திரேலிய பிட்ச்களில் பேட்டர்களால், சிறப்பாகவே ரன்களை அடிக்க முடியும். இதனால், கோலி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
தவிர, விராட் கோலிக்கு அடுத்து, இந்திய டெஸ்ட் அணியில் மிகப்பெரிய வீரராக அடுத்து யார் உருவெடுப்பார் என்று கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " டெஸ்டில் விராட் கோலிக்கு அடுத்து, ரிஷப் பண்ட்தான் மிகப்பெரிய ஸ்டார் வீரராக இருப்பார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணிக்கு கோலி என்னென்ன செய்தாரோ, அதேபோல் ரிஷப் பண்டாலும் செய்ய முடியும். கோலிக்கு அடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் மிகப்பெரிய வீரராக இருப்பார்’’ எனக் கூறியிருக்கிறார்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...