பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
டெஸ்ட் வெளியீட்டுத் தேதி!
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மூக்குத்தி அம்மன் - 2 நடிகர்கள் அறிவிப்பு!
இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பே நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெஸ்ட் திரைப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.