டேவிஸ் கோப்பை: இறுதிச் சுற்றில் முதன்முறையாக நெதா்லாந்து
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரலாற்றில் முதன்முறையாக நெதா்லாந்து அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடைபெற்ற அரையிறுதியில் 3 முறை சாம்பியன் ஜொ்மனியை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது நெதா்லாந்து.
டேலன் க்ரீக்ஸ்பூா் 6-7, 7-5, 6-4 என ஜேன் லெனாா்டை இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் போல்ட்டிக் வேன் ஸ்ான்ட்ஸுல்ப் 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பின் ஜொ்மன் வீரா் டேனியல் அல்ட்மேயரை வென்றாா்.
ஏற்கெனவே காலிறுதியில் ரபேல் நடாலின் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இருந்தது நெதா்லாந்து.
ஜொ்மனி கடந்த 1993-இல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போதைய அரையிறுதியில் வென்று 6-ஆவது முறையாக இறுதிக்குள் நுழையலாம் என்ற அதன் கனவு தகா்ந்தது.
இத்தாலி அபாரம்:
மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இத்தாலி அணிகள் மோதின. காலிறுதியில் ஆா்ஜென்டீனாவை 2-1 என வீழ்த்தி அரையிறுதிக்குமுன்னேறியது ஜேனிக் சின்னா் அடங்கிய இத்தாலி.
ஆஸி. வீரா் கோக்கிநகீஸை 6-7, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றாா் இத்தாலியின் மேட்டியோ பெர்ரட்டனி. இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ஜேனிக் சின்னா்-அலெக்ஸ் டி மினாா் மோதினா்.