செய்திகள் :

ட்ரம்ப் - புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?

post image

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர்.

அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, 'அதிபரானதும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன்' என்று மிகவும் உறுதியாகக் கூறியிருந்தார். இதற்காக அவர் நம்பியிருந்த அவருடைய‌ 'நண்பர்' புதின் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இன்னமும் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

ஆகஸ்ட் மாதம்

கடந்த ஆகஸ்ட் மாதம், புதினை அமெரிக்காவிற்கு அழைத்து ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அங்கே பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த புதின், ரஷ்யாவிற்குச் சென்ற பின், எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை.

மேலும், அந்தச் சந்திப்பிற்கு அடுத்த இரண்டு வாரங்களில் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்கும் என்று கூறப்பட்டது.

இரண்டு மாதங்கள் ஆகியும், இந்தச்‌ சந்திப்பு இன்னமும் நடக்கவில்லை.

ட்ரம்ப் - புதின் சந்திப்பு?

இந்த நிலையில் தான், நேற்று ட்ரம்ப் - புதின் உரையாடல் நடந்துள்ளது.

ஹங்கேரியில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்று ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார்.

போர் நிறுத்தம் நடந்தால், அமெரிக்கா - ரஷ்யா இடையே வர்த்தக ஒப்பந்தம் நடக்க உள்ளது.

புதினின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ட்ரம்ப் உடனான சந்திப்பை உறுதிப்படுத்தும்.

இது மட்டும் நடந்துவிட்டால், ட்ரம்ப் - புதின் - ஜெலன்ஸ்கி என மூன்று தரப்பிற்குமே சூப்பர் வெற்றி.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

உக்ரைன்

உக்ரைன் மிகச்சிறிய நாடு. அது இப்போது பிற நாடுகளின் உதவியோடுதான் ரஷ்யாவுடன் மோதி வருகிறது. இது அந்தச் சிறிய நாட்டிற்கு மிகப்பெரிய சுமை, பொருளாதாரத்திற்கும் சிக்கல்தான். அதனால்தான், ஜெலன்ஸ்கி தொடர்ந்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறார்.

ரஷ்யா

இப்போது ரஷ்யா. பிற உலக நாடுகள் ரஷ்யப் பொருள்களுக்கு அதிக வரி விதித்தும், தடை விதித்தும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும், அமெரிக்கா ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கும் வரி விதித்து வருகிறது.

ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் ரஷ்யப் பொருளாதாரத்திற்கு, இது மேலும் பெரிய அடி.

இதில் இருந்து தப்பிக்கப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

ட்ரம்ப்

உலகில் நடந்த பல போர்களை நிறுத்தியதாக கூறிக்கொண்டிருக்கும் ட்ரம்பால் தான் முதலில் கூறிய போரை நிறுத்த முடியவில்லை. நோபல் பரிசுக்காக காத்திருக்கும் ட்ரம்பிற்கு இந்தப் போர் நிறுத்தம் மிகப்பெரிய‌ ப்ளஸை வாரி வழங்கலாம்.

ஆக, சீக்கிரம் இந்தப் போர் முடிவு பெறும் என்று நம்புவோமாக!

`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!

சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமு... மேலும் பார்க்க

4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

கரூர்: ``மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?'' - அண்ணாமலை கேள்வி

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது, 'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show

* கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து அதிமுக-வினர்?* சிறுநீரக விற்பனை முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்* கடன் சுமை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கம் என்ன?* புதிதாக விண்ணப்பித்தவர... மேலும் பார்க்க

Stalin கையில் Candidates list, 50 பெண் வேட்பாளர்கள்? Diwali பரிசு! | Elangovan Explains

'எடப்பாடி, விஜய் என ஆறு சிக்கல்களால் தவிக்கிறார் மு.க. ஸ்டாலின்' என்கிறார்கள். இந்த சிக்கல்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுத்துள்ளார். முக்கியமாக பெண்கள் வாக்குகளை டார்கெட் செய்து புதிய திட்டங்கள்... மேலும் பார்க்க

‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan | Karur Stampede

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும்... மேலும் பார்க்க