செய்திகள் :

தங்கம் விலை இன்றும் உயர்வு! ரூ. 69,000-ஐ நோக்கி...

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது.

கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 66,880 விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள் ரூ. 67,600, செவ்வாய் ரூ. 68,080, புதன் ரூ. 68,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் சவரனுக்கு ரூ. 400 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் ஒரு கிராம் ரூ. 8,560-க்கு விற்கப்படுகிறது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 அதிகரித்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,12,000-ஆக விற்கப்படுகிறது.

இதையும் படிக்க : வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

நாய்ஸில் ரூ.173 கோடி முதலீடு செய்யும் போஸ் கார்ப்பரேஷன்!

புதுதில்லி: சர்வதேச ஆடியோ நிறுவனமான போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.173 கோடி அளவு முதல... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிவு

மும்பை: வளர்ச்சி தூண்டுதல் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்த போதிலும், உலகளவில் அதிகரித்து வரும் கட்டண கொந்தளிப்புக்கு மத்தியில், இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் சரிந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று 6% ஆக குறைத்தது. அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு ... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! இன்று இது இரண்டாவது முறை!!

கடந்த ஒரு சில நாள்களாக விலை குறைவது போல போக்குக் காட்டி வந்த தங்கம் விலையானது, குறைந்த வேகத்தில் இன்று இரண்டு முறை உயர்ந்துள்ளது.புதன்கிழமை காலையில் வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உய... மேலும் பார்க்க

குறைந்த விலையில் இன்ஃபினிக்ஸின் புதிய ஸ்மார்ட்போன்!

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துவரும் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.இன்ஃபினிக்ஸ் நோட் 50 எக்ஸ் (Infinix Note 50X 5G+) என்ற 5 ஜி மாடல் ஸ்மார்ட் போனை வெற... மேலும் பார்க்க

மீண்டும் இன்று சரிந்து வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

பங்குச்சந்தை இன்று(ஏப்ரல் 9) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை(ஏப். 7) பங்குச்சந்தை வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரை சரிந்தன. இதனால் அன்றைய தினம் ... மேலும் பார்க்க