செய்திகள் :

தங்கம் விலை இன்று உயர்வு! எவ்வளவு தெரியுமா?

post image

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

நேற்று விலை சற்றே குறைந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 58,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) தங்கம் ரூ.7,295-க்கு விற்பனை ஆகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,750-க்கும், ஒரு சவரன் ரூ. 62,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 குறைந்து ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதிகபட்சமாக கடந்த அக். 23 அன்று ஒரு கிராம் வெள்ளி 112-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக...

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வள... மேலும் பார்க்க

இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்: தவெக தலைவர் விஜய்

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண... மேலும் பார்க்க

18 ஏக்கர் சிதம்பரம் நடராஜா் கோயில் நிலம் விற்பனை - இந்துசமய அறநிலையத்துறை!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை, பொது தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக, ஆவணங்களுடன் தமிழக இந்துசமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது.சென்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.டானா புயல் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவ... மேலும் பார்க்க

காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு! ரயில் சேவை பாதிப்பு

காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த விவேக் விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றுகொண்டிருந்த விவேக... மேலும் பார்க்க

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிரா... மேலும் பார்க்க