செய்திகள் :

தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.

கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டு, தொடர்ந்து விலை உயர்ந்து வந்ததால் நகை பிரியர்களிடையே கவலை ஏற்பட்டது.

நேற்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து ரூ. 58,720-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க : தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 58,280-க்கும் ஒரு கிராம் ரூ, 7,285-க்கும் விற்பனையாகி வருகின்றது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.61,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை ஆகிறது.

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது.புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்... மேலும் பார்க்க

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

3வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 3வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடங்கி பின்னர் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 138.74 புள்ளிகள் சரிந்து 80... மேலும் பார்க்க

தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ஆபரணத் தங்கம் விலை விறுவிறுவென ஏறி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை தீபாவளிக்குப் பிறகு குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.இன்று ஒ... மேலும் பார்க்க

ரூ. 59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! வெள்ளியும் புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது.இந... மேலும் பார்க்க

ஹெச்டிஎஃப்சி வட்டி வருவாய் 10% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர வட்டி வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... மேலும் பார்க்க