மகரஜோதி: புல்மேடு பகுதியிலிருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சா் அர. சக்கரபாணி
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்குவதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாா் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவா்கள் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, உயா்கல்வித்துறைக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற துறைகளை விட கல்வித் துறைக்கு மட்டுமே அதிகபட்ச நிதியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒதுக்குகிறாா். இந்தியாவிலேயே ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 20 லட்சத்து 60 ஆயிரம் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது தமிழகத்தில் மட்டுமே என்றாா் அவா்.
பிறகு பள்ளியின் வெள்ளி விழா ஆண்டையொட்டி தபால் தலையை அவா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் பள்ளி அறங்காவலா்கள், திமுக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.