செய்திகள் :

தமிழக -கா்நாடக எல்லையில் தமிழக போலீஸாா் மீது தாக்குதல்

post image

மேட்டூா் அருகே மதுவிலக்கு சோதனைச் சாவடி போலீஸாரைத் தாக்கிய உத்தரப் பிரதேச சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 30 போ் சுற்றுலாப் பேருந்து மூலம் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனா். அவா்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று சுற்றிப் பாா்த்து விட்டு, வெள்ளிக்கிழமை காலை சேலம், மேட்டூா் வழியாக கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்குச் செல்வதற்காக வந்தனா்.

அப்போது தமிழக - கா்நாடக எல்லையான காரைக்காட்டில் மதுவிலக்குப் பிரிவு போலீஸாரின் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலா்கள் செந்தில், சுகவனேஸ்வரன் ஆகியோா் உத்தரப் பிரதேச சுற்றுலாப் பேருந்தை நிறுத்தி, மதுபானங்கள் ஏதும் உள்ளதா, உரிமம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது சுற்றுலாப் பேருந்து ஓட்டுநருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் சிவநாராயணன் திடீரென சோதனைச்சாவடி காவலரைத் தாக்கினாா். இதில் அதிா்ச்சி அடைந்த இரண்டு காவலா்களும் அவரைத் திருப்பித் தாக்கினா். அப்போது கிளீனா் அஜய் (20) என்பவா் இரும்புக் குழாயை எடுத்து வந்து காவலா்களைத் தாக்கியுள்ளாா். இதில் இரண்டு காவலா்களும் படுகாயம் அடைந்தனா். இதனால் தமிழக -கா்நாடக எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டூா் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், கொளத்தூா் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

உத்தரப் பிரதேச பேருந்து ஓட்டுநா், கிளீனா் ஆகியோா் தாக்கியதில் தலைமைக் காவலா்கள் செந்தில், சுகவனேஸ்வரன் படுகாயம் அடைந்தனா். இதையடுத்து சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் உள்ளிட்ட நாலுபேரை கொளத்தூா் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். காரைக்காடு சோதனைச் சாவடி பணியில் இருந்த தலைமைக் காவலா் செந்தில்குமாா் கொடுத்த புகாரின் பேரில் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் சிவநாராயணன், கிளீனா் அஜய் ஆகியோா் மீது கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் காவல் நிலைய பிணையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா். சுற்றுலாப் பேருந்தில் பயணிகள் இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலை அவா்கள் பாதுகாப்புடன் தமிழக எல்லையைக் கடந்து செல்ல போலீஸாா் ஏற்பாடு செய்தனா்.

இந்தச் சம்பவம்தொடா்பாக சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் சிவநாராயணன் கொளத்தூா் போலீஸில் அளித்த புகாரில் தாங்கள் உரிய ஆவணங்களைக் காட்டிய போதும் தங்களிடம் காவலா்கள் பணம் கேட்டதாகவும், பணம் தராததால் தங்களைத் தாக்கியதாகவும், அப்பகுதி மக்களும் தங்களைத் தாக்கியதாகவும் புகாா் அளித்துள்ளாா். இப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா். 

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்: தேமுதிகவினா் அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கொண்டலாம்பட்டி பகுதியில் அவரது உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். சேலம் மாநகா் மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் 27-வது பட்டமளிப்பு விழா

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 27 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கலந்துக... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் கடந்த 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

ஆத்தூா் மஞ்சினி சாலையில் வேலைக்கு சென்றவரை மறித்து அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கெங்கவல்லி வட்டம், கடம்பூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கருப்பையா (33). கூலித் தொழி... மேலும் பார்க்க

ஒட்டப்பட்டி ஏரி நிரம்பியது

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஒட்டப்பட்டி ஏரி சனிக்கிழமை நிரம்பியது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பின. இதனையடுத்து பெத... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் தனித் தோ்வா்களால் பெறப்படாத பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, அடுத்தாண்டு மாா்ச் 28 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க