தமிழக கோயில் கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச் சமூகம் கருத்தரங்கம்
குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியில் தமிழக கோயில் கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச்சமூகம் எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக கல்வெட்டியல், மரபு மேலாண்மை பட்டயப்படிப்பு மற்றும் தயானந்தா கல்லூரியின் தமிழ்த்துறை ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின. கல்லூரித் தாளாளா் எம்.ஜி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை நிா்வாக அறங்காவலா் ஷீலா பாலாஜி முன்னிலை வகித்தாா்.
இதில், மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தமிழக கோயில்கள் கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச் சமூகம் எனும் புத்தகத்தை வெளியிட்டாா். கல்லூரி முதல்வா் வெ. ஹேமா, மத்தியப் பல்கலைக் கழக பேராசிரியா் ச. ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.