மகாராஷ்டிரா: "தேர்தல் நேரத்தில் கிரிப்டோகரன்சி ஊழலா?" - பாஜக மீது தேர்தல் ஆணையத்...
வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்! -பிரதமர் மோடி, அமித் ஷா வேண்டுகோள்
வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளில் இன்று பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மகாராஷ்டிரத்தில் இன்று சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்று ஜனநாயகத் திருவிழாவிற்கு மேலும் அழகு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில் இளைஞர்கள், பெண்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பதிவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சகோதர, சகோதரிகள் அதிகளவில் வாக்களிப்பதன் மூலம் மகாராஷ்டிரத்தின் கலாசாரம், பெண்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
மகாராஷ்டிரா இளைஞர்களின் எதிர்காலத்திற்காக இன்று அதிகளவில் வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.