செய்திகள் :

Strawberry: உச்சத்தில் ஊட்டி ஸ்ட்ராபெர்ரி; உற்சாகத்தில் விவசாயிகள்!

post image

குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் இங்கிலீஷ்‌ மற்றும் சைனீஸ் ரக காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பல ஆண்டுகளாக பச்சை தேயிலை கொள்முதல் விலையும் சரிவில் இருப்பதால் விவசாயிகள், மாற்று சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஸ்ட்ராபெர்ரி சாகுபடி

கொய்மலர், ஸ்ட்ராபெர்ரி மற்றும் மூலிகை தாவர வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ட்ராபெர்ரி மற்றும் கொய்மலர்களுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருப்பதால் அனுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி ரூ.400 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்ட்ராபெர்ரி விலை உயர்வு குறித்து தெரிவித்த குன்னூர் விவசாயிகள், " கேமரோஸா, ஸ்வீட் சார்லி போன்ற ஸ்ட்ராபெர்ரி ரகங்களை பயிரிட்டு வருகிறோம். வழக்கமாக கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விலை கிடைக்கும். மாறுபட்ட காலநிலை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. வரத்து குறைவால் விலை அதிகரித்து வருகிறது. A,B,C என மூன்று ரகங்களாக பிரித்து அனுப்புகிறோம். முதல் ரகத்திற்கு கிலோ 400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது" என்றனர்.

ஸ்ட்ராபெர்ரி சாகுபடி

நீலகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி கூறுகையில், "நீலகிரியில் நிலவும் இதமான காலநிலை ஸ்ட்ராபெர்ரி உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால், சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி சாகுபடி பரப்பளவை உயர்த்தவும் தேவையான மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

`Anmol' buffalo: ஹரியானாவில் ஒரு எருமையின் விலை ரூ.23 கோடி... அதன் `டயட்' இன்னும் அதிர்ச்சி ரகம்!

இதுவரை மாட்டின் விலை எவ்வளவு என கேள்விப்பட்டிருப்போம்? ரூ.30 ஆயிரம் என்று சொல்லலாமா... இன்னும் அதிகமாக போனால் ஒரு லட்ச ரூபாய், இரண்டு லட்ச ரூபாயாக இருக்கும். ஆனால், ஹரியானாவை சேர்ந்த 'அன்மால்' என்ற எர... மேலும் பார்க்க