செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

post image

மகாராஷ்டிர தேர்தலையொட்டி முக்கிய அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் பொதுமக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை 6.30 மணி முதலே வாக்குச் சாவடிகளில் குவியத் தொடங்கினர். வாக்குப் பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.

மகாராஷ்டிர ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவரது மனைவி, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ராஜ்குமார் ராவ், கௌதமி கபூர் மும்பையில் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 9 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிக... மேலும் பார்க்க

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்! -பிரதமர் மோடி, அமித் ஷா வேண்டுகோள்

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளில் இன்று பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

ஜார்க்கண்ட் 2-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பல... மேலும் பார்க்க

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது. கடந்த 1963-ஆம் ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா... மேலும் பார்க்க