Thalapathy 69: "தளபதி 69 படத்தில் நான் நடிக்கிறேனா?" - சிவ ராஜ்குமார் சொல்வதென்ன?
விஜய்யின் 69-வது படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாபி தியோல், ப்ரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர். நேற்றைய தினம் இப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார் பூஜா ஹெக்டே.
கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற கடந்த வாரம் தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதத்தில் சிவ ராஜ்குமாரும், "அற்புதமான கதாபாத்திரத்தை வினோத் எனக்குக் கூறினார். என்னுடைய தேதிகள் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. இது விஜய்யின் கடைசி திரைப்படமும் கூட... படத்தில் நான் இருக்கவே விரும்புகிறேன்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
தற்போது படத்தில் அவர் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இது பற்றி அவர், "சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் அ. வினோத் என்னைச் சந்திப்பதற்காக வந்தார். இந்த முறை அந்த கதாபாத்திரம் அமையவில்லை. வரும் காலங்களில் வேறு கதாபாத்திரங்களை எனக்குச் சொல்வதாகக் கூறியிருக்கிறார். இந்த முடிவு எதனால் பின்வாங்கப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. நானும் பல திரைப்படங்களை கமிட் செய்திருக்கிறேன். 'தளபதி 69'-ல் நடிக்க வேண்டுமென்றால் என்னுடைய தேதிகளை மாற்ற வேண்டிய நிலை வந்திருக்கும். தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். ஒரு சர்ஜரிக்காக டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அப்போது வேலையிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு ஜனவரி மாதத்தில் திரும்பிவிடுவேன்." எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...