செய்திகள் :

U.P: ``கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்கவில்லை; அவர் ரகசியமாக..'' - என்ன சொல்கிறார் உ.பி ஆளுநர்?!

post image

'உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்கள் அல்ல... பரத்வாஜ முனிவர் தான்' என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

லக்நௌவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், "உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது பரத்வாஜர் முனிவர் தான். ரைட் சகோதரர்கள் அல்ல. ஆனால், அதற்கான அங்கீகாரம் பரத்வாஜருக்கு சென்று சேரவில்லை.

ராமாயணத்தில் கூறப்படும் புஷ்பக விமானம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பான மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகும். ஆனால், அதை யார் செய்தார், எங்கு, எப்போது செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்!

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். அவர் ஆறு மாதங்கள் தூங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்த ஆறு மாதங்கள் ரகசியமாக தனது ஆய்வகத்தில் ஆயுதங்களை உருவாக்கி கொண்டிருந்திருக்கிறார். இவரது தொழில்நுட்பங்கள் வேறு நாடுகளுக்கு சென்றுவிடக்கூடாது என்று தான் ரகசியமாக அந்த ஆய்வுகளை செய்திருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து வந்த மக்கள் நம் தொழில்நுட்பங்கள் மற்றும் ஐடியாக்களை படித்து, தெரிந்து பல விஷயங்களை கண்டுபிடித்திருக்கின்றனர். நாம் நம் கண்டுபிடிப்புகளை பற்றி படித்து, தெரிந்துகொள்ள வேண்டும்" என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Amit Shah: ``குற்றம் நிரூபிக்காமல் சிறையில் இருப்பவர்களுக்கு நீதி கிடைக்கும்'' - அமித்ஷா சொல்வதென்ன?

'குற்றம் நிரூபிக்கப்படாமல் ஜெயிலில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதி கிடைக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் குற்றம் நிரூபிக்கப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: விறுவிறுப்பு... ஆர்வத்துடன் வாக்களித்த பாலிவுட், அரசியல் பிரபலங்கள்..!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதே போன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இன்று இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை வருமா?

Doctor Vikatan:குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு பால் கொடுக்கலாம்? நிறைய பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்ச... மேலும் பார்க்க

கழிவறையை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? | உலக கழிவறை தினம்!

உலக கழிவறை தினமான நவம்பர் 19 அன்று, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ‘கழிப்பறைகள் – அமைதிக்கான இடம்’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. முதலில் ஜாக் சிம் என... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா... வரவேற்பு முதல் பரிசுகள் வரை -Photo Album

எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா Mecheri-M.Kalipatti எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா Mecheri-M.Kalipatti எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா Mecheri-M.Kalipatti எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பிரசாரம் ஓய்ந்தது... நாளை வாக்குப்பதிவு; மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

அனல் பறக்கும் பிரசாரம்..மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால்... மேலும் பார்க்க