மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கிவருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியிலிருந்து வினாடிக்கு 9269கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.44அடியிலிருந்து 107.91 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து இன்று(நவம்பர்.20) காலை 108 அடியை நெருங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையின் தற்போதைய நீர் இருப்பு 75.47 டிஎம்சியாக உள்ளது.