செய்திகள் :

"தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் உள்ளது; ஆனால்..." - திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்

post image

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழிசை சௌந்தரராஜன்

ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள், இவர்கள் மட்டுமே தமிழ் பற்றாளர்கள், பாஜகவைச் சார்ந்தவர்கள், மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்கிறார்.

சமூக வலைதளங்களில் என்னை இந்திஇசை என பதிவிடுகிறார்கள். ஆனால் தமிழ் என்பது என் பெயரில் மட்டுமில்லை, உயிரிலும் இருக்கிறது.  திமுக அமைச்சர்களின் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

திமுகவினர் நடத்தக்கூடிய  எல்லா பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது., தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபடுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக, சரியாக, உணர்வுபூர்வமாக பாடப்பட வேண்டும். அதை வைத்து ஒரு பூதாகரமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பவன் கல்யாண் கூறியது உதயநிதியின் மனதில் தைத்து விட்டது என நினைக்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின்

தவறுகளை திருத்திக் கொண்டு உதயநிதி கிரிவலம் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது.  பவன் கல்யாண் கூறியதை இவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.  பயந்துவிட்டார்கள் என கூற மாட்டேன். பயபக்தியோடு இருக்க வேண்டும்.” என்றார்.

மகாராஷ்டிரா தேர்தல்: தமிழருக்கு மீண்டும் வாய்ப்பு; 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ப... மேலும் பார்க்க

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க