செய்திகள் :

தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு

post image

அதிமுகவில் முன்னாள் அமைச்சா் என்.தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் அமைப்புச் செயலா், மாவட்டச் செயலா் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அது தொடா்பாக உரிய விளக்கம் கேட்டு, அக். 10-இல் அவா் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டது தொடா்பாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு அவா் விளக்கம் அளித்துள்ளாா்.

இதையடுத்து, அதிமுகவின் அமைப்புச் செயலா் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் பொறுப்பிலும் தளவாய் சுந்தரம் மீண்டும் நியமிக்கப்படுகிறாா். அவருக்கு அதிமுகவினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். பேரணியைத் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கட்சிப் பொறுப்பிலிருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி உயிரிழப்பு

உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னா் வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்கள் கடித்ததால், பலத... மேலும் பார்க்க

வீட்டில் மனைவிக்கு பிரசவம் பாா்த்தவருக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை குன்றத்தூரில் மருத்துவ கண்காணிப்பின்றி வீட்டிலேயே மனைவிக்கு பிரசம் பாா்த்த கணவரை போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடுமையாக எச்சரித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மனோகரன். குன்... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ. 10 கோடியில் புதுப்பிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

சேத்துப்பட்டு பசுமை பூங்காவை ரூ. 10 கோடியில் மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்க விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024-இல் தங்கம் வென்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் இ... மேலும் பார்க்க

மருத்துவமனைக்கு வரும் 40 % பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள்: மருத்துவா்கள் தகவல்

அரசு மருத்துவமனைகளை நாடுவோரில் 40 சதவீதம் பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் நள்ளிரவு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையின் 7 முதல் 14-ஆம் எண் வரையுள்ள வாசல்கள் பூட்டப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நள்ளிரவில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேடு சந்தை வளாகத்தி... மேலும் பார்க்க