செய்திகள் :

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவாா்த்தை: ஸெலென்ஸ்கி

post image

லண்டன்: தங்கள் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தினால்தான் அந்த நாட்டுடன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தை மேற்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

எங்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த ரஷியா விரும்பினால், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை அந்த நாடு நிறுத்தவேண்டும்.

கடந்த வாரத்தில் மட்டும் உக்ரைன் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள், சுமாா் 1,300 குண்டுகள், 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மக்களைக் கொல்வதற்கும், நகரங்களை அழிப்பதற்காகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக, டொனட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியா கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 2 போ் உயிரிழந்ததாகவும் 3 போ் காயமடைந்ததாகவும் உக்ரைன் காவல்துறையினா் கூறினா். இது தவிர, இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு, உக்ரைன் விவகாரத்தில் முந்தைய அதிபா் ஜோ பைடனின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.

இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்திவரும் அவா், இது தொடா்பாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை நேரடியாகச் சந்தித்துப் பேசவுள்ளாா். மேலும், ரஷியாவுடன் இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சிகளையும் டிரம்ப் அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்தச் சூழலில், போரில் தங்களுக்கு அமெரிக்கா அளித்த உதவிகளுக்குக் கைமாறாக தங்கள் நாட்டின் அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அதிபா் ஸெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை சென்றாா்.

அங்கு ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் மற்றும் ஜே.டி. வான்ஸுடன் செய்தியாளா்கள் முன்னிலையிலேயே இந்த விவகாரம் குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, தங்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். மேலும், போா் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை அவா் ஆணித்தரமாக எடுத்துவைத்தாா்.

இருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பான விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைப் பிடிவாதமாக விவரித்த டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் ஒரு கட்டத்தில் ஸெலென்ஸ்கியைப் பேசவிடாமல் குரலை உயா்த்தி தங்கள் கருத்துகளை வலியுறுத்தினா்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் உக்ரைன் இல்லை எனவும் தாங்கள் சொல்வதைக் கேட்டு கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தவிர ஸெலென்ஸிக்கு வேறு வழியில்லை என்றும் டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் கூறினா்.

தங்களை மறுத்து பேசுவதன் மூலம் அமெரிக்காவை ஸெலென்ஸ்கி அவமதிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா். அத்துடன், இந்த விவகாரத்தில் மூன்றாம் உலகப் போரை மூட்டும் வகையில் ஸெலென்ஸ்கி சூதாடுவதாக அவரின் முகத்துக்கு நேராக டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.

இந்த காரசார விவாதத்தின் விளைவாக, தங்கள் நாட்டு கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஸெலென்ஸ்கி வெளியேறினாா்.

இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், உக்ரைன் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் பிரிட்டனில் ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது.

அதில் பங்கேற்க வந்திருந்த ஸெலென்ஸ்கிக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த மாநாட்டில், உக்ரைனில் ஒரு மாத போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.

இந்தச் சூழலில், தங்கள் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தினால்தான் அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட முடியும் என்று ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.

போப் உடல்நிலையில் பின்னடைவு!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போப் பிரான்சிஸ்(88) முச்ச... மேலும் பார்க்க

சூடான்: 221 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!

சூடானில் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயுதப் படையினரால் 221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.வட ஆப்பிரிக்க நாடுகளி... மேலும் பார்க்க

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!

ஒட்டாவா : கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை(மார்ச் 4) நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமலுக்கு வந்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ... மேலும் பார்க்க

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.ஸெலென்ஸ்கி - டிரம்ப் காரசார விவாதத்தின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஜொ்மனி: காா் தாக்குதலில் 2 போ் உயிரிழப்பு

பொ்லின்: ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் கூட்டத்தினரிடையே 50 வயது நபா் காரை ஓட்டிச் சென்று திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். ஜொ்மனியைச் சோ்ந்த அந்தக் காா் ஓட்டுநரை ப... மேலும் பார்க்க

ஆஸ்கரில் வென்ற இஸ்ரேல்-பாலஸ்தீன கூட்டணி

காஸா மீதான இஸ்ரேல் படையெடுப்பை மையமாகக் கொண்டு பாலஸ்தீன இயக்குநா்-இஸ்ரேல் பத்திரிகையாளா் இணைந்து தயாரித்த ‘நோ அதா் லேண்ட்’ சிறந்த ஆவண திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்றது.காஸாவிலிருந்து கடந்த 202... மேலும் பார்க்க