செய்திகள் :

தாமதமாகும் கலிபோர்னியா தேர்தல் முடிவுகள்; இந்திய தேர்தல் முறையை பாராட்டிய எலான் மஸ்க்..!

post image

எலான் மஸ்க் கருத்து

உலகின் பெரும் பணக்காரரும், டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசின் செயல்திறன் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்க இருப்பவருமான எலான் மஸ்க், இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டியுள்ளார். இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணப்படுவதாக கூறியுள்ளார். கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கிறார்

கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டார். அதில், “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகம் எழுப்பி வந்த சமயத்தில், எலான் மஸ்க்கின் இந்த கருத்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் பதிவுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளியில் இருந்து அதை ஹேக் செய்வது என்பது சாத்தியமற்றது” என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "எதையும் ஹேக் செய்ய முடியும்” என்றார். இவிஎம் இயந்திரத்திற்கு எதிரான எலான் மஸ்க்கின் இந்த கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

இந்த நிலையில், எலான் மஸ்க் இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணப்படுவதாக எலான் மஸ்க் கூறியிருகிறார். எலான் மஸ்க் இப்படி கூறியதற்கு காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

அமெரிக்காவில் கடந்த 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவை பொறுத்தவரை கலிபோர்னியா மாகாணம் அதிக மக்கள் தொகை கொண்டது. இந்த மாகாணத்தில் சுமார் 4 கோடி பேர் வசிக்கிறார்கள். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இங்கு 1.6 கோடி பேர் வாக்களித்து இருந்தனர். இந்த மாகாணத்தில், குடியரசுக் கட்சி முன்னிலையில் உள்ளது.

எலான் மஸ்க்

வாக்கெடுப்பு முடிந்து 29 நாள்களுக்குப் பிறகும் கலிபோர்னியா அதன் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தொழிலதிபர் எலான் மஸ்க், இந்தியா லோக் சபா தேர்தலின் போது வெற்றிகரமாக மேற்கொண்ட மாபெரும் வாக்குப்பதிவு செயல்முறைகளுடன் ஒப்பிட்டுப் கருத்து தெரிவித்துள்ளார் . ஒரே நாளில் இந்தியா 640 மில்லியன் வாக்குகளை எண்ணியதாகவும், அதே நேரத்தில் அமெரிக்க அரசு இன்னும் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் மஸ்க் சுட்டிக்காட்டினார்.

கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை...

கலிபோர்னியாவில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிலுவையில் உள்ள நிலையில், அசோசியேட்டட் பிரஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் 58.6 சதவிகித வாக்குகள் பெற்று வென்றதாகவும், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 38.2 சதவிகித வாக்குகளை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 39 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் 16 மில்லியனுக்கும் அதிகமானோர் நவம்பர் 5-ம் தேதி நடந்த தேர்தலில் பங்கேற்றனர்.

வாக்குப்பதிவு

மாநிலத்தில் தேர்தல்கள் முதன்மையாக அஞ்சல் மூலம் நடத்தப்படுகின்றன, நேரில் போடப்பட்ட வாக்குகளுடன் ஒப்பிடும்போது அஞ்சல் வாக்குகளை சரிபார்க்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச் சீட்டும் தனித்தனியாகச் சரிபார்க்கப்பட்டு செயலாக்கப்பட வேண்டும், இது ஒரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சீட்டை ஸ்கேன் செய்வதைக் காட்டிலும் மிகவும் கடினமான செயல்முறையாகும்.

அரசு, டிசம்பர் 1 வரை, வாக்காளர்களின் தவறுகளை சீரமைக்க (cure) அனுமதிக்கிறது. கையொப்பமிட மறந்தது, தவறான இடத்தில் கையொப்பமிட்டது அல்லது சரியான உறையில் வாக்குச்சீட்டை சேர்க்காதது போன்ற தவறுகள் அடங்கும்.

இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் 2024 அமெரிக்கத் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து வெற்றி பெற்றார். டிரம்ப் 2.0 இன் கீழ் புதிய `அரசாங்கத் திறன் துறை’யின் தலைவராக எலான் மஸ்க் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

``சினிமாவைத் தாண்டிய நெருக்கம்...'' - மண்புழு தாத்தா... விழாவில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எழுதிய, "மண்புழு தாத்தாவின் மண்நல புரட்சிப் பாதை" என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று (24/11/2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகி... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: ``ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்" - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்...தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி - திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ... மேலும் பார்க்க

``எங்களை அவமானப்படுத்திவிட்டீர்கள்... முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர... மேலும் பார்க்க

Kangana Ranaut: ``பெண்களை அவமரியாதை செய்பவர்கள்..." - உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நா... மேலும் பார்க்க

Udhaynithi Stalin: ``இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!" - தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் 27-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நா... மேலும் பார்க்க

``கரூர் விஷன் - 2030; ரூ.50,000 கோடி இலக்கு!'' -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கரூர் மாவட்டம் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் க... மேலும் பார்க்க