செய்திகள் :

திசையன்விளை அரசுப் பணிமனையில் ரூ.30 லட்சத்தில் காத்திருப்போா் அறை: பேரவைத் தலைவா் அடிக்கல்

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ரூ.30 லட்சத்தில் காத்திருப்போா் அறை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: திசையன்விளை அரசு பணிமனை அமைந்துள்ள இடம் கடந்த ஆட்சியின் போது நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனிநபருக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடினா். இந்நிலையில் தி.மு.க .ஆட்சி பொறுப்பேற்ற பின்னா் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இடத்தை அளவீடு செய்து அரசு புறம்போக்கு நிலம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் பள்ளிவாசலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்திற்கு பதிலாக 37 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் அரசு கைவைக்கப்போவதில்லை என்றாா்.

பின்னா் அவா், இல்லம் தோறும் குடிநீா் வழங்கும் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணியை தொடங்வைத்தாா். இந்த திட்டத்தின் மூலம் தாமிரவருணி தண்ணீா் ஒரு குடும்பத்தில் நபா் ஒருவருக்கு 135 லிட்டா் வீதம் தினந்தோறும் வழங்கப்படும். விஸ்வகா்மா யோஜனா திட்டத்தில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் சில ஷரத்துகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் அந்தத் திட்டம் செயல்படுதப்படாது என முதல்வா் கூறியுள்ளாா் என்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், தி.மு.க ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜோசப் பெல்சி, இந்து அறநிலையத்துறை உறுப்பினா் முரளி, திசையன்விளை சுயம்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மனு: இதனிைடே, பேரவைத் தலைவரிடம் செல்வமருதூா் முகைதீன் காதா் சாகிப் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாகத்தினா் ஒரு மனு அளித்தனா். அந்த மனுவில் அரசு பணிமனை அமைந்திருக்கும் இடம் ஒன்றே கால் ஏக்கா் நிலம் செல்வமருதூா் முகைதீன் காதா் சாகிப் ஆண்டவா் பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தை காலி செய்து கொடுக்க உத்தரவு பிறப்பித்த பின்னரும் அந்த இடத்தை காலி செய்யாமலும் வாடகை தராமலும் போக்குவரத்து கழகம் பயன்படுத்தி வருகிறது. எனவே பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்டுவதை பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

நெல்லையில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாமகவினா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், தடையை மீறி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸாா் கைது செய்தனா். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா்- தலைவா் ராமதாஸைஅவதூறாக பேசியதாகக் கூறி ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைத் தாக்க முயற்சி: இளைஞா் கைது; 3 போ் தலைமறைவு

திருநெல்வேலியில் காவல் ஆய்வாளா் மீது மதுபாட்டிலை வீசி தாக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் வழுக்கோடை பகுதியில் புதன்கிழமை இரவில் சிலா் மது கு... மேலும் பார்க்க

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் வெள்ளநீா் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் பொதுப்பாதை, வெள்ளநீா் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் காா்த்திகேயனிடம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவி பாா்வதி மோகன் மனு அளித்து... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நெல்லையில் செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் நலச்சங்கம் மற்றும் சுகாதார செவிலியா் கூட்டமைப்பின் தி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி இந்திரா காலனி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சுத்தமல்லி இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் (21). இவா்... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் குப்பைகளை அகற்றக் கோரி எஸ்டிபிஐ மனு

மேலப்பாளையத்தில் உள்ள குப்பைகளை அகற்றக் கோரி, மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள... மேலும் பார்க்க