Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்...
திண்டுக்கல்: "கொடுத்த பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்" - காங்கிரஸ் பிரமுகர் மீது பெண் புகார்
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், குழந்தைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'பெரியகோட்டையில் வசிக்கும் காமராஜ் மகன் மருதைவீரன், அவரது தங்கை லட்சுமி மற்றும் தாயார் சின்னப்பொன்னு ஆகிய நபர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பு ரூ.12,00,000 லட்சம் ரூபாய் அவசர தேவைக்காக வெளியில் வாங்கி கொடுத்தேன்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு இடம் குறைந்த விலைக்கு வருகிறது அதை வாங்க வேண்டும் என்பதற்காக 10 பவுன் நகை மற்றும் என் மகளிடம் இருந்த 14 பவுன் நகை என மொத்தம் 24 பவுன் நகையைக் கொடுத்தேன்.
பல நாள்களாகியும் பணத்தையும் நகையையும் திருப்பி தராததால் கொடுத்த நகையைக் கேட்டு பலமுறை வீட்டிற்குச் சென்றேன். அதற்கு இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று காலம் கடத்தி வந்தார்.

மேலும் மருதைவீரன் என்பவர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் துரைமணிகண்டனிடம் இது பற்றிக் கூறியுள்ளார். மணிகண்டன், மருதைவீரன் இருவரும் இணைந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு என்னை வருமாறும் அங்கு வந்தால் பணம் தருவதாகவும் கூறினார்கள்.
அங்குச் சென்றதற்கு பணம் தரமுடியாது, பணம் கேட்டால் வீட்டை அடித்து நொறுக்குவதோடு குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவோம் என்று அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்கள். எனவே, மருதைவீரன், அவரது தங்கை லட்சுமி, தாயார் சின்ன பொன்னு, துரை மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.