செய்திகள் :

திண்டுக்கல்: சிதிலமடைந்த பாலம்; அச்சுறுத்தும் பள்ளம்... அலட்சிய அதிகாரிகளால் மக்கள் கவலை!

post image

திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுத்து கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் இணையும் பாலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். குறிப்பாக, அந்தப் பாலம் அருகே வசித்துவரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அக்குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

"முதலில் ஒரு தண்ணீர் லாரி அந்த பாலத்தின் மீது சென்றதால் சிறிய பள்ளம் உருவானது. பின்னர் வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அது பெரிதாகி தற்போது ஆபத்தான நிலைக்கு மாறியுள்ளது. அந்த தெருவில் தினசரி பல ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதால் வழிச்சாலையில் கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், மழைக்காலம் என்பதால் பாலம் முழுமையாக உடைந்து போய்விடும் என்ற அச்சத்திலே இருக்க வேண்டியுள்ளது. பள்ளம் பாலத்தின் ஓரத்தில் இருந்தால் பரவாயில்லை, ஆனால், மையத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் மிகவும் ஆபத்தாக இருக்கிறது” என அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த கூத்தாயி நம்மிடம் பேசும்போது,

“ரெண்டு மாசமா நாங்க சொல்லிக்கிட்டே இருக்கோம். இந்த பாலத்தை எங்களுக்கு போட்டுத் தர மாட்டுறாங்க. ஒரு குழந்தை கூட அந்த பள்ளத்தில விழுந்துடுச்சு. பார்த்து பார்த்து நாங்க குழந்தைய வச்சிக்கிற மாதிரி இருக்கு. சம்பந்தப்பட்ட அதிகாரிங்க கிட்ட சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கல” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!!!

Silent Mode-ல் Vijay , EPS-ன் 3 வெடி , Stalin ஷாக்? | Elangovan Explains

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்ட... மேலும் பார்க்க

கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை வசதி கோரும் மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி கிராமத்தின் கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து தார் எழும்பி குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.... மேலும் பார்க்க

``சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு'' - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரண்டு வாரம் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.13 நாள்களாகப் போராட்டக்காரர்களை அலட்சியப்ப... மேலும் பார்க்க

`2.5 மில்லியன் இந்தியர்களின் பெருமூச்சு' - கஃபாலா சட்டத்தை ரத்து செய்த சவூதி இளவரசர்!

வெளிநாட்டு மோகம்விரைவில் பணக்காரனாக வேண்டும், கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1970, 80, 90-களில் வெளிநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.குறிப்பாக வளைகுடா நாடுகளான ... மேலும் பார்க்க

ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக இருக்கும் சிறை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெவ்வேறு நாடுக... மேலும் பார்க்க