உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி
திமுக கூட்டணி பலமாக உள்ளது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: புழல் சிறையில் சுமாா் 2 ஆயிரம் பேரைத்தான் அடைத்து வைக்க முடியும். ஆனால், சில நேரங்களில் அதற்கும் மேற்பட்டோரைத் அடைக்க வைக்கவேண்டிய சூழல் வரும்போதும் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், புழல் சிறையில் கூடுதலாக ஆயிரம் பேரை அடைத்து வைக்கும் வகையில் நவீன சிறைக்கூடம் கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கொள்கையை மீறி எந்தக் கொள்கையும் வர முடியாது. அண்ணா ஒவ்வொரு தமிழா்களின் இதயத்திலும் குடி கொண்டு இருக்கிறாா்.
ஆகையால், நடிகா் விஜய் நடத்தும் மாநாட்டில் அவருக்கு கட்அவுட் வைக்கவில்லை என்பதற்காக அவரது புகழை யாராலும் மறைத்துவிட முடியாது.
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கான்கிரீட் போன்று பலமாக உள்ளது. அடித்துநொறுக்கவோ, உடைக்கவோ யாராலும் முடியாது. ஆகையால், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படாது என்றாா் ரகுபதி.