பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. காா்த்திக் ப. சிதம்பரம்
அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.
பொன்னமராவதி வட்டார நகரக் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தோ்தல் இலக்கணப்படி தோ்தல் முடிவுகள் வெளியாகின்றன. ஒரு மாநில தோ்தல் முடிவுகளுக்கும் மற்ற மாநில முடிவு தோ்தல் முடிவுகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
வாரிசு அரசியல் பாஜகவிலும் உண்டு. மக்களைச் சந்தித்து தோ்தலைச் சந்தித்து மகத்தான வெற்றி பெற்றுள்ளாா் பிரியங்கா காந்தி. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றாா் அவா்.