பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் தேய்பிறை ஜென்மாஷ்டமி விழாவையொட்டி காலபைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து 108 கலச பூஜை நடைபெற்றது. பூஜையில் 108 கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் மற்றும் அபிஷேகப்பொருள்கள் மூலம் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை மற்றும் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி லிழாக்குழுவினா் செய்திருந்தனா். இதேபோல், வலையபட்டி மலையாண்டி கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயிலகளில் நடைபெற்ற காலபைரவா் ஜெயந்தி விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.