செய்திகள் :

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" - மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

post image

தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அப்போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் என்றால் அமலாக்கத்துறை முறையாக ஆய்வு செய்யவில்லை. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதால் அது குறித்து அமலாக்கத்துறை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ஓ.பி.எஸ் வெளியில் பேசுவதைத் தவிர்த்து, கட்சிக்குள் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.

மேலும் 2026 தேர்தலில் அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

மற்ற நாடுகளில் எல்லாம் 8ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு இன்னும் ஏட்டுக் கல்விதான் கற்றுத் தரப்படுகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி

தி.மு.க-வினர் மொழியை மட்டும் சிந்திக்கின்றனர். மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை. 3 மொழி மட்டும் இல்லை 4 மொழி கற்றுக்கொண்டால் கூட தவறில்லை.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத்தான் கற்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மத்திய அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தி.மு.க இந்தியை வைத்து அரசியல் செய்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தி.மு.க செய்தது என்ன? இந்தி கற்பதால் தமிழ் அழிந்து விடும் எனக் கூறுவது தவறு. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது.

தமிழக மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தைத் தனித்து வைத்து அரசியல் செய்வதற்காகத்தான் தி.மு.க-வினர் இந்தியை எதிர்க்கிறார்கள்.

திமுக

பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் கொள்கை. அதை நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய பா.ஜ.க எங்களை ஏமாற்றி விட்டதால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகிக்கும். அப்போது எங்களது கொள்கை நிறைவேற்றப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'ஈரான் மீது குண்டு வீசப்படும்' - ட்ரம்ப் மிரட்டலின் பின்னணி?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம்தான் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. பிற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அவை ஐ.நா-வின் அணு ஆயுத பரவல்... மேலும் பார்க்க

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல் கட்சி, 30 வருட ஆட்சிப் பொறுப்பு என்று தமிழக அரசியலில் மட்... மேலும் பார்க்க

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ... மேலும் பார்க்க

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது..."தமிழ்நாடு முழுவதும் அரச... மேலும் பார்க்க

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்... மேலும் பார்க்க

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் ப... மேலும் பார்க்க