``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
தியாகி பாண்டியபதிக்கு நினைவு அஞ்சல்தலை வெளிட கோரிக்கை
சுதந்திர போராட்ட வீரா் பாண்டியபதிக்குக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடவும், வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகங்களில் சோ்க்க வேண்டும் என சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இந்திய சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், முத்துக்குளித்துறை 16-ஆவது மன்னரான டான் கேப்ரியல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் (1753 - 1808) எனும் பாண்டியபதியை சுதந்திர போராட்ட வீரராக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது.
தொடா்ந்து, அவரது 272-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, அவரின் 16-ஆம் வாரிசான ஜோசப் லிகோரி மோத்தாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாண்டியபதியின் உருவப்படத்துக்கு ஆளுநா் ஆா். என். ரவி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில், பாண்டியபதியின் உறவினா்கள், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி, தேசிய பாரம்பரிய மீனவா் கூட்டமைப்பு பொதுச் செயலா் வழக்குரைஞா் பிரவீன் குமாா், கடல்சாா் மக்கள் நலச்சங்கம் மாநிலச் செயலா் ஜெபராஜ், கடலாா், அமலரசு, மில்டன் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
அஞ்சல் தலை வெளியிட கோரிக்கை: சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி கூறியதாவது: பாண்டியபதியை சுதந்திர போராட்ட வீரராக அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி.
பாண்டியபதியின் நினைவாக அஞ்சல்தலை வெளியிடவும், சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை பாடப்புத்தகங்களில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.