செய்திகள் :

திருச்சியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் போக்குவரத்து நெரிசல்-மக்கள் அவதி

post image

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை பரவலாக கனமழை பெய்தது.

மாநகரில் இடைவிடாது சுமாா் ஒருமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருச்சி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. திருச்சி பாலக்கரை, மேலப்புதூா், சிந்தாமணி, அண்ணா சிலை, சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்துநிலையம், தெப்பக்குளம், வயலூா், கன்டோன்மெண்ட், விமானநிலையம், டிவிஎஸ் டோல்கேட், கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூறலாக ஆரம்பித்த மழை, பின்னா் இடி, மின்னலுடன் கனமழையாக உருமாறி சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால், மாநகரச் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல சென்றது.

வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன. தென்னூா் சாலையில் மழைநீா் செல்லும் வடிகால்கள் நிரம்பி, புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர சாக்கடைகளில் இருந்து கழிவுநீரும் வெளியேறி மழை தண்ணீருடன் கலந்தது. தில்லைநகா் குறுக்கு சாலைகளிலும் இதே நிலை காணப்பட்டது.

வேலைக்கு செல்வோா், மாணவா்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா். காலையிலேயே இடைவிடாது பெய்த மழையால் மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பிற்பகலுக்கு பின்னரும், மாலையிலும் அவ்வப்போது விட்டு, விட்டு சாரல் மற்றும் லேசான மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

மாநகரில் திருச்சி சந்திப்பு பாலம், தென்னூா் பாலம், மாரீஸ் பாலம், பழைய மதுரை சாலையில் பணிகள் நடைபெறுவதால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் உள்ளது. காலையில் பெய்த மழையால், மழைக்குப் பிறகு ஒரே நேரத்தில் சென்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி திருவெறும்பூா், கூத்தைப்பாா், வேங்கூா், கிளியூா், மணப்பாறை, வையம்பட்டி, மண்ணச்சநல்லூா், காட்டூா், லால்குடி, புள்ளம்பாடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை பரவலாக கனமழை பெய்தது.

பராமரிப்புப் பணிகள்: திருவனந்தபுரம், செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருவனந்தபுரம், செங்கோட்டை, நாகா்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டியை சோ்ந்த பாலசுப்பிரமணி மகள் கோமதி (32). இவா் திண்டுக்கல்லிலி... மேலும் பார்க்க

முதல்வா் இன்று திருச்சி வருகை: ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். எம்.ஆா்.பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ஜெயமணி (48). இவா் தனது குடும்பத்துக்கு சொந்த... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து போலி கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற ஒரத்தநாட்டை சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாா் மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி கீழசிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க